திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 17 ஜூலை 2021 (17:29 IST)

சூர்யா 40 பர்ஸ்ட் லுக் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

சூர்யா நடித்து வரும் சூர்யா 40 படத்தின் படப்பிடிப்பு தற்போது காரைக்குடியில் நடந்து வருகிறது.

சூர்யாவின் 40 ஆவது படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி வருகிறார்.  இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க டி இமான் இசையமைக்க உள்ளர். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்க முக்கியமானக் கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடிக்க உள்ளார். கொரோனா இரண்டாம் அலை காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் இப்போது அரசு கட்டுபாடுகளோடு திரைப்படங்களின் படப்பிடிப்பை தொடங்க அனுமதி வழங்கியுள்ளது. அதையடுத்து சூர்யா 40 படத்தின் படப்பிடிப்பு  ஜூலை 2 ஆம் வாரம் முதல் புதுக்கோட்டையில் தொடங்க உள்ளதாம். அதுமட்டுமில்லாமல் ஒரே கட்டமாக மீதமுள்ள காட்சிகள் அனைத்தையும் படமாக்கி முடிக்கவும் திட்டமிட்டுள்ளதாம்.

மீதமுள்ள காட்சிகளை சென்னையிலேயே படமாக்க உள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் ஏற்கனவே எடுத்த காட்சிகளுக்கு அது வித்தியாசமாக இருக்கும் என்பதால் இப்போது காரைக்குடிக்கு படக்குழு படப்பிடிப்புக்கு சென்று நேற்று முதல் படப்பிடிப்பை தொடங்கியுள்ளதாம். இந்நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜூலை 23 ஆம் தேதி சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு இணையத்தில் வெளியாக உள்ளதாம்.