செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 26 ஜூலை 2024 (11:48 IST)

பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக் ஓட்டிய இளைஞர்.. கைது செய்யப்பட்டவுடன் எலும்பு முறிவு..!

பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக் ஓட்டிய இளைஞரை போலீசார் கைது செய்த சில நிமிடங்களில் அவருக்கு கை, கால் எலும்பு முறிந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
இளைஞர்கள் பலர் பைக்குகளை கண்மண் தெரியாமல் ஓட்டி வருகின்றனர் என்பதும் இதனால் பல விபத்துக்கள் ஏற்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் கடலூரில் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக்கில் கத்தியை வீசியபடி சூர்யா என்ற இளைஞர் சென்றதாக காவல்துறைக்கு தகவல் வெளியானது.

இதனை அடுத்து காவல்துறையினர் அந்த இளைஞரை விரட்டிப் பிடிக்கும் போது திடீரென சூர்யா கீழே விழுந்ததாகவும் அப்போது அவர் வைத்திருந்த கத்தி  பிரகாஷ் என்பவரை தாக்கியதால் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது..

இந்த நிலையில் போலீசார் சூர்யாவை விரட்டிப் பிடிக்கும் போது பைக்கில் இருந்து சூர்யா கீழே விழுந்ததாகவும் இதனை அடுத்து அவருக்கு கை கால் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் சூர்யாவுக்கு கை கால் கட்டு போட்ட  புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது

Edited by Mahendran