ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 26 ஜூலை 2019 (14:48 IST)

’சப் இன்ஸ்பெக்டரே’ இப்படி செய்தால் எப்படி .. என்ன நடந்தது தெரியுமா ?

இருசக்கர வாகனத்தில் செல்வோர் ஹெல்மெட் அணிவது தமிழகத்தில் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இருசக்கர வாகனத்தில் செல்வோர் மற்றும் உடன்செல்வோர் ஹெல்மெட் அணிந்து செல்லவில்லை என்றால் அவர்கள் மீது வழக்குப் பதிவு  செய்து உரியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னை மாம்பலம் காவல் உதவி ஆய்வாளர் மதன் இருசக்கர வாகனத்தில் சென்ற போது ஹெல்மெட் அணியாமல் சென்றுள்ளார். எனவே அவரை  பணியிடை நீக்கம் செய்து காவல்துறை இணைஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 
 
மதன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, ஹெல்மெட் அணியாமல் இருந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானதல் அடிப்படையில் அவர் மீது இணை ஆணையர் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.