செவ்வாய், 10 மார்ச் 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva

கூடுதலாக ஒருநாள் விடுமுறை.. பொங்கலுக்கு மொத்தம் 5 நாட்கள் விடுமுறை..பள்ளிக்கல்வித்துறை..!

கூடுதலாக ஒருநாள் விடுமுறை.. பொங்கலுக்கு மொத்தம் 5 நாட்கள் விடுமுறை..பள்ளிக்கல்வித்துறை..!
தமிழக பள்ளி மாணவர்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. நடப்பு ஆண்டு பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடும் வகையில், ஜனவரி 14 முதல் ஜனவரி 18 வரை தொடர்ந்து 5 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
 
வழக்கமாக ஜனவரி 15, 16 மற்றும் 17 ஆகிய தேதிகள் அரசு விடுமுறை நாட்களாக இருக்கும் நிலையில், இந்த ஆண்டு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று ஜனவரி 14 அன்று கூடுதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 
 
இதனைத் தொடர்ந்து ஜனவரி 18 ஞாயிற்றுக்கிழமை என்பதால், மாணவர்களுக்கு தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது. இந்த அறிவிப்பால் சொந்த ஊர்களுக்கு சென்று பொங்கல் பண்டிகையைக் கொண்டாடத் திட்டமிட்டுள்ள மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர். விடுமுறை முடிந்து ஜனவரி 19-ம் தேதி மீண்டும் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva