வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 2 அக்டோபர் 2019 (09:25 IST)

தீபாவளி மற்றும் ஆயுத பூஜை சிறப்புப் பேருந்துகள் – விவரம் உள்ளே !

ஆயுத பூஜை மற்றும் தீபாவளிப் பண்டிகைகள் வர இருப்பதை அடுத்து சென்னையில் இருந்து வெளியூர் செல்பவர்களுக்கு சிறப்புப் பேருந்து இயக்க போக்குவரத்துத்துறை ஏற்பாடு செய்துள்ளது.

தீபாவளி மற்றும் ஆயுதபூஜைக்காக இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ‘சென்னையில் இருந்து 5 இடங்களில் சிறப்புப் பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும். ஆயுத பூஜைக்காக  4ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை 6145 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றன.

அதேப்போல தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வரும் 24ஆம் தேதி முதல் 26ஆம்  தேதி வரை 10,940 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்தும் 8,310 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன முன்பதிவு செய்ய சென்னை முழுவதும் 20 முன் பதிவு மையங்கள் திறக்கப்பட உள்ளன. ’ என அறிவித்தார்.
சென்னை சிறப்பு பேருந்து நிலையங்கள் விவரம் :-
  • மாதவரம் புதிய பேருந்து நிலையம் - ஆந்திரா வழியாக செல்லும் பேருந்துகள்
  • கே.கே.நகர் - கிழக்கு கடற்கரை வழியாகப் புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள்
  • மெப்ஸ் பேருந்து நிலையம் - திண்டிவனம் வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள் 
  • தாம்பரம் ரயில் நிலைய அருகில் - திண்டிவனம், வந்தவாசி, செஞ்சி வழியாக செல்லும் பேருந்துகள்
  • பூந்தமல்லி பேருந்து நிலையம் - ஆற்காடு, வேலூர், காஞ்சிபுரம் ஆகியப் பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள்