செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 7 செப்டம்பர் 2021 (07:56 IST)

சென்னை மழையால் ஒருவர் பரிதாப பலி!

சென்னையில் நேற்று இரவு முதல் விடிய விடிய பெய்த மழையின் காரணமாக ஒருவர் பரிதாபமாக பலியாகி உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
சென்னையில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் நேற்று மாலை முதல் மழை பெய்ய தொடங்கியது. இரவு முழுவதும் மழை பெய்ததால் சென்னையில் உள்ள பெரும்பாலான சாலைகளில் மழை நீர் தேங்கி இருந்தது என்பதும் ஒரு சில பகுதிகளில் முழங்கால் அளவிற்கு மழைநீர் தேங்கி இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சென்னை மில்லர்ஸ் சாலை அருகே அரசு மதுபான கடைக்கு எதிரே மழை நீர் தேங்கி இருந்த இடத்தில் நடந்து சென்ற புரசைவாக்கத்தில் சேர்ந்த கிருஷ்ணய்யா என்பவர் பரிதாபமாக பலியானார். இது குறித்து விசாரணை செய்ய மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.