திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 6 பிப்ரவரி 2023 (09:44 IST)

சென்னையில் இன்றும், நாளையும் மின் தடை! – எந்தெந்த பகுதிகளில்?

சென்னையில் இன்று மற்றும் நாளை பராமரிப்பு பணிகளுக்காக சில பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

காலை 9 மணிக்கு மின்விநியோகம் நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணிகள் முடிந்து மதியம் 2 மணிக்கு மீண்டும் மின் விநியோகம் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது,

அதன்படி இன்று (06.02.2023) அடையாறு பகுதியில் உள்ள எஞ்சம்பாக்கம் ஷாலிமார் தோட்டம், பெரியார் தெரு, பஜனை கோவில் தெரு, கங்கை அம்மன் கோவில் தெரு, வால்மீகி தெரு ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

நாளை (07.02.2023) அன்று ஏழு கிணறு, பல்லாவரம், சோழிங்கநல்லூர், ஐயப்பந்தாங்கல், ஆவடி மற்றும் பெரம்பூர் பகுதிகளில் பல இடங்களில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.

Edit by Prasanth.K