செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 3 பிப்ரவரி 2023 (08:33 IST)

அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்!

rain
அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள ஆறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
வங்க கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கை அருகே கரையை கடந்த போதிலும் தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கலந்து சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
 
மழை காரணமாக இன்று திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய 6 மாவட்டங்களில் இன்னும் மூன்று மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
Edited by Siva