1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 22 மே 2022 (09:33 IST)

இனி பின் இருக்கையில் அமர்ந்தாலும் ஹெல்மெட் கட்டாயம்! – சென்னை காவல்துறை அறிவிப்பு!

சென்னையில் இருசக்கர வாகன விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க பின்னிருக்கையில் அமர்வோருக்கும் ஹெல்மெட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தலைநகரமான சென்னையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாகி வரும் நிலையில் விபத்துகளும் அதிகரித்து வருகின்றன. இதனால் ஹெல்மெட் அணிவது உள்ளிட்ட போக்குவரத்து பாதுகாப்பு விதிமுறைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் சென்னையில் இருசக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள் மட்டுமல்லாது பின்னால் அமர்ந்து பயணிப்பவர்களும் இனி ஹெல்மெட் அணிவது கட்டாயம் என கூறப்பட்டுள்ளது. இந்த புதிய விதி நாளை முதல் அமலுக்கு வருவதாகவும், இதற்கான விழிப்புணர்வு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.