பேச்சுவார்த்தைக்கு பின்னரும் போராட்டம்! சென்னையில் செவிலியர்கள் கைது!
பணிநிரந்தரம் கோரி சென்னையில் போராட்டம் நடத்திய ஒப்பந்த செவிலியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 2020ம் ஆண்டில் நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்த நிலையில் தமிழகத்தில் சுகாதார சேவைகளுக்காக ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்கள் பலர் நியமிக்கப்பட்டனர்.
இவர்களது ஒப்பந்த காலம் டிசம்பர் 31ல் முடிவடைந்த நிலையில் அவர்களது ஒப்பந்த காலம் நீட்டிக்கப்படாது என தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. ஆனால் ஒப்பந்தகால செவிலியர்கள் தங்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் ஒப்பந்த செவிலியர்களுக்கு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நடமாடும் மருத்துவமனைகளில் பணி வழங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். அமைச்சர் வாக்குறுதி அளித்த பின்னரும் உடனடியாக பணி நியமனம் வழங்கப்பட வேண்டும் என ஒப்பந்த செவிலியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இன்று சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த செவிலியர்கள் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு எழுந்துள்ளது.
Edit By Prasanth.K