1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : சனி, 22 ஜனவரி 2022 (08:43 IST)

சென்னையில் இன்றைய பெட்ரோல் டீசல் விலை!

சென்னையில் கடந்த 78 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்பதை பார்த்து வருகிறோம்
 
அந்த வகையில் 79-வது நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதனால் பொது மக்கள் தொடர்ச்சியாக நிம்மதியுடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
உத்தரப்பிரதேசம் பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் மார்ச் மாதம் வரை நடைபெற இருப்பதால் மார்ச் மாதம் வரை பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராது என்று கருதப்படுகிறது 
ஆனால் அதே நேரத்தில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து கொண்டே வருவதால் மார்ச் மாதத்திற்குப் பிறகு பெட்ரோல் விலை கணிசமாக உயரும் என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் உள்ளன 
 
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.101.40 எனவும், சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.91.43 எனவும் விற்பனையாகிறது.