1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 21 ஜனவரி 2022 (06:58 IST)

சென்னையில் இன்று பெட்ரோல் விலையில் மாற்றமா?

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயராமல் ஒரே நிலையில் இருந்ததால் சென்னை உள்பட இந்தியா முழுவதும் கடந்த எழுபத்தி ஏழு நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்று 78வது நாளாக பெட்ரோல் டீசல் விலை உயரவில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. ஆனால் அதே நேரத்தில் உத்திரப்பிரதேசம் உள்பட 5 மாநில தேர்தல் முடிந்தவுடன் ஓரளவு விலை உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
இந்த நிலையில் சென்னையில் இன்று பெட்ரோல் ஒரு லிட்டர் விலை ரூபாய் 101.40 எனவும் டீசல் விலை ரூபாய் 91.43 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை சரிவுக்கு ஏற்ப இந்தியாவிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க வேண்டும் என எண்ணெய் நிறுவனங்களுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது