செவ்வாய், 6 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 16 மார்ச் 2025 (09:49 IST)

போரை நிறுத்தினால் மட்டுமே பணயக் கைதிகள் விடுதலை! - ஹமாஸ் உறுதி!

Hamas

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ள நிலையில் காசாவில் தாக்குதல் நடந்து வருவதாக ஹமாஸ் குற்றம் சாட்டியுள்ளது.
 

 

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக போர் தொடர்ந்து நடந்து வந்த நிலையில் அமெரிக்காவின் தலையீட்டின் பேரில் கடந்த 2 வாரங்களுக்கு முன்னதாக போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டது. போர் நிறுத்த ஒப்பந்தப்படி ஹமாஸ் தாங்கள் பிடித்து வைத்துள்ள பணையக்கைதிகளை ஒப்படைத்து வரும் நிலையில், இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீனர்களும் விடுதலை செய்யப்பட்டு வந்தனர்.
 

 

இதற்கிடையே காசாவை பாலஸ்தீன மக்களிடம் ஒப்படைக்காமல் அமெரிக்கா தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு ஹமாஸ், பாலஸ்தீன் மக்களிடையே எதிர்ப்பு எழுந்துள்ளது.
 

 

மேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் மீறி காசாவில் இஸ்ரேல் படைகளின் தாக்குதல் தொடர்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் பணையக்கைதிகளை விடுவிப்பது குறித்த பேச்சுவார்த்தையும் முழுமையான போர் நிறுத்தத்தை அமல்படுத்தினால் மட்டுமே பணையக்கைதிகள் விடுவிக்கப்படுவர் என ஹமாஸ் தெரிவித்துள்ளது. இதனால் போர் நிறுத்தம் மற்றும் கைதிகள் பரிமாற்றத்தில் சிக்கல் எழுந்துள்ளது.
 

 

Edit by Prasanth.K