வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 13 ஜூலை 2022 (17:10 IST)

சென்னை மேயர் ப்ரியா போலீசில் புகார்: போலீசார் விசாரணை!

Mayor
சென்னை மாநகராட்சி மேயர் பிரியா போலீசில் புகார் அளித்துள்ளதை அடுத்து போலீசார் இந்த புகார் குறித்து விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தல் வெற்றி பெற்ற சென்னை மேயராக பொறுப்பை ஏற்றவர் பிரியா என்பதும் அவர் சென்னை நகரின் வளர்ச்சிக்காக பல திட்டங்களை அமல்படுத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடதக்கது. 
 
இந்த நிலையில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா படத்தை வாட்ஸ்அப்பில் டிபியாக வைத்து நூதன மோசடி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து 3 பேரிடம் பணம் பறிக்க முயற்சி செய்ததாகவும் சென்னை மேயர் தரப்புக்கு தகவல் வெளியானது. 
 
இதுகுறித்து சென்னை மேயர் பிரியா சென்னை சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்துள்ள நிலையில் அந்த புகார் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.