தொடர்புடைய செய்திகள்
- 144 போட்டும் டிராஃபிக் ஜாம்: திருந்தாத சென்னை!!
- தமிழகத்தில் மேலும் ஐவருக்கு கொரோனா: அமைச்சர் விஜயபாஸ்கர் டுவீட்
- சென்னை விசா மையத்திற்கு வந்தவருக்கு கொரோனா: 100க்கும் மேற்பட்டவர்களை தேடும் சுகாதாரத்துறை
- கொரோனாவால் எல்லாம் போச்சு! – 300 லிட்டர் பாலை சாலையில் கொட்டி போராட்டம்!
- மாவட்ட அளவில் முன்மாதிரியாக விளங்கும் பஞ்சாயத்து – ஊரடங்கு உத்திரவினை 100 சதவிகிதம் கடைபிடித்து வரும் பஞ்சாயத்து !
ஊரடங்கு நாளிலும் டிராபிக் ஜாம் – சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம் !
சென்னையில் உள்ள பாடி மேம்பாலத்தில் இன்று காலை டிராபிக் ஜாம் ஏற்படும் அளவுக்கு மக்கள் அதிகளவில் வெளியே செல்ல ஆரம்பித்துள்ளனர்.
சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் நோய் தொற்று உலக நாடுகளில் பரவி பெருவாரியான மக்கள் இனத்தை கடுமையாக பாதித்து வருகிறது. இதனால் அந்தந்த நாட்டு மக்கள் அனைவரும் இந்த நோய் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள வீட்டுக்குள் முடங்கியுள்ளனர். மேலும் அரசாங்கமும் மக்கள் அத்தியாவசியத் தேவைகள் தவிர வேறு எதற்கும் வெளியே வரக் கூடாது என ஊரடங்கை அறிவித்துள்ளது.
ஆனால் தமிழகத்தில் பல இடத்தில் மக்கள் அதை சரியாகப் பின்பற்றுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இன்று காலை சென்னையில் உள்ள பாடி மேம்பாலத்தில் மக்கள் அதிகளவில் வாகனத்தில் வர அங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இது சம்மந்தமானப் புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
