1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 20 செப்டம்பர் 2023 (20:22 IST)

நடுநிலை பத்திரிக்கைக்கு தர்மம் இதுதான்- முதல்வர் மு.க.ஸ்டாலின்

kamal- mk stalin
சென்னை, கலைவாணர் அரங்கில் ‘கலைஞர் 100 விகடனும், கலைஞரும்’  நூல் வெளியீட்டு விழா இன்று நடந்து வருகிறது.

சென்னை, கலைவாணர் அரங்கில் நடந்து வரும் இந்த விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘’பத்திரிக்கைகள் அரசு செயல்படுத்தும் நல்ல திட்டங்களை ஆதரித்து எழுதுங்கள். அப்போதுதான் நீங்கள் விமர்சிக்கையில் அதற்கு மரியாதை இருக்கும். எதையும் ஆதரிக்காமல், விமர்சித்து மட்டும் எழுதினால் அதற்கு மதிப்பு இருக்காது’’ என்று தெரிவித்தார்.

மேலும், சரியானதை ஆதரிப்பதும், விமர்சனம் இயருந்தால் அதைச் சுட்டிக் காட்டுவதுதான் நடுநிலை பத்திரிக்கைக்கு இருக்கும் தர்மம் என்று தெரிவித்துள்ளார்.
 

‘கலைஞர் 100 விகடனும், கலைஞரும்’  நூலில் முதல் பிரதியை முதல்வர் வெளியிட அதை கமல்ஹாசன் பெற்றுக் கொண்டார்.