சென்னையில் ஓட்டுனர் இல்லா மெட்ரோ ரயில்: மெட்ரோ நிர்வாகம் தகவல்!
சென்னையில் உள்ள மூன்று வழித்தடங்களில் ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரயிலை இயக்க திட்டமிட்டிருப்பதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னையில் மெட்ரோ ரயில்கள் 3 வழித்தடங்களில் அமைக்கப்பட்டு இருக்கும் நிலையில் இந்த மூன்று வழித்தடங்களில் ஓட்டுனர் இன்றி தானியங்கி முறையில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருவதாக என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது
சென்னையில் தற்போது இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் நடைபெற்று வருகிறது என்பதும் கலங்கரை விளக்கத்தில் இருந்து பூந்தமல்லி வரை ஒரு வழித்தடமும், மாதவரத்தில் இருந்து சோழிங்கநல்லூர் வரை ஒரு வழித்தடமும் அமைக்கப்பட்டு வருகிறது
இந்த திட்டங்கள் வரும் 2026ஆம் ஆண்டுக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் சென்னையில் உள்ள 3 வழித்தடங்களிலும் ஓட்டுனர் இன்றி தானியங்கி முறையில் ரயில் இயங்க வழிவகை செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது