வெள்ளி, 2 டிசம்பர் 2022
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified வியாழன், 22 செப்டம்பர் 2022 (09:27 IST)

அரும்பாக்கம் வங்கி கொள்ளையில் ஈடுபட்ட 7 பேர் மீது குண்டாஸ்!

robbery
சென்னை அரும்பாக்கத்தில் தனியார் வங்கியில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த கொள்ளையில் ஈடுபட்ட 7 கொள்ளையர்கள் மீது குண்டாஸ் வழக்கு பாய்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சென்னை அரும்பாக்கம் தனியார் வங்கியில் கிலோ கணக்கில் நகைகளை கொள்ளையடிக்கப்பட்டது. இந்த கொள்ளையில் அந்த வங்கிக் கிளையில் பணிபுரிந்த ஒருவர் தலைமையில் தான் நடந்தது என்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது
 
இதனை அடுத்து அடுத்தடுத்து இந்த கொள்ளையில் ஈடுபட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்க.து இந்த நிலையில் சென்னை அரும்பாக்கம் கொள்ளையில் ஈடுபட்ட முருகன்,சூர்யா, ஸ்ரீவட்சன், செந்தில் குமரன்,சந்தோஷ்,பாலாஜி  ஆகிய 7 பேர் மீது குண்டாஸ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
 
 குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட நோட்டீஸ் புழல் சிறையில் உள்ள ஏழு பேருக்கும் வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளதாக.