1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Petrol and Diesel rate at Chennai today

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வா? இன்றைய நிலவரம்!

Petrol
சென்னையில் சுமார் 3 மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்பதை பார்த்து வருகிறோம் 
 
அண்டை நாடான இலங்கையில் 265 சதவீதம் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்ட நிலையில் இந்தியாவில் மூன்று மாதங்களாக பெட்ரோல் டீசல் விலை உயரவில்லை என்பது இந்திய அரசின் சாதனையாக கருதப்படுகிறது
 
இந்த நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் உயர்வு இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இதனை அடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 எனவும் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 எனவும் விற்பனையாகி வருகிறது 
 
இருப்பினும் மத்திய மற்றும் மாநில அரசுகள் பெட்ரோல் டீசலுக்கான வரியை மேலும் குறைத்து பொது மக்களின் சுமையை குறைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகிறது.
 
 
அடுத்த கட்டுரையில்
59 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!