1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By VM
Last Modified: ஞாயிறு, 24 மார்ச் 2019 (10:25 IST)

அதிக கட்டண வசூலில் சென்னை விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையம் முதலிடம்

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் ஒரு நாளைக்கு ரூ.2.63 லட்சம் கட்டணம் வருவாயுடன் சென்னை விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையம் முதலிடத்தில் இருக்கிறது.  திருமங்கலம் ரயில் நிலையம் ரூ.2.50 லட்சத்துடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
 
சென்னையில்  வண்ணாரப்பேட்டையில் இருந்து விமான நிலையம் வரை இரு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை கடந்த மாதம் 10ஆம் தேதி முழுமையாக நிறைவடைந்து . தினசரி காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை ரயில் சேவை நடைபெறுகிறது. மெட்ரோ ரயில் சேவை முழுமையடையாமல் இருந்த காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் பயன்படுத்தவில்லை. இப்போது ஓரளவிற்கு சென்னைவாழ் மக்கள் மெட்ரோ ரயில் சேவையை  பயன்படுத்துகின்றனர். 
 
இதன்படி சென்னை விமான நிலையத்திற்கு அதிகப்படியான மக்கள் தினசரி வந்து செல்வதால் அதிக கட்டண வசூலில் விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையம் முதல் இடத்தை பிடித்துள்ளது.  விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்தில் மட்டும் நாள்தோறும் சுமார் ரூ.2.63 லட்சம் டிக்கெட் கட்டணமாக கிடைக்கிறதாம். இரண்டாவது இடத்தை 2.50 லட்சத்துடன் திருமங்கலம் ரயில் நிலையம் உள்ளது. இந்த இடத்தில் 2.25 லட்சத்துடன் வடபழனி ரயில் நிலையம் உள்ளது.  ஒரு லட்சத்து 65 ஆயிரம்  வசூலுடன் நான்காவது இடத்தில் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் உள்ளது. 
 
குறைந்த வருவாய் ஈட்டும் ரயில் நிலையமாக சென்னை பச்சையப்பா கல்லூரி மெட்ரோ ரயில் நிலையம் உள்ளது. இங்கு ஒரு நாளைக்கு 20 ஆயிரம் ரூபாய் வரைதான் கட்டணம் வசூலாகிறதாம்.  கீழ்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் 20 முதல் 25 ஆயிரம் வரை வசூல் உடன் கடைசிக்கு முந்தைய இடத்தில் உள்ளது. 
 
மெட்ரோ ரயில் நிலையம் செயல்பாட்டுக்கு முழுமையாக வராதபோது 15 லட்சம் முதல் 20 லட்சம் வரை வந்து கொண்டிருந்ததாம். இப்போது மெட்ரோ ரயில் நிலையங்கள் முழுமையாக செயல்பாட்டுக்கு வந்த பின்பு ரூபாய் 25 லட்சம் இதற்குமேல் கட்டணம் வசூலாவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மெட்ரோ ரயிலில் பயணிகளின் வருகையை அதிகரிக்க பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல் திட்டங்களையும் அதிகாரிகள் செயல்படுத்தி வருகிறார்கள்.