வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 12 ஜனவரி 2020 (09:49 IST)

சென்னை மெட்ரோ ரயிலில் ‘பொங்கல்’ கட்டண தள்ளுபடி!

சென்னை மெட்ரோ ரயிலில் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் 50 சதவீத கட்டண சலுகை அறிவிக்கப்பட்டு இருந்தது தெரிந்ததே. இந்த நிலையில் வரும் 15, 16, 17 ஆகிய மூன்று நாட்கள் பொங்கல் விடுமுறை என்பதால் இந்த மூன்று நாட்களிலும் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்ய 50 சதவீதம் கட்டண தள்ளுபடி என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் பொங்கல் தினத்தில் சுற்றுலா பகுதிகளுக்கு செல்பவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் 
 
அதுமட்டுமின்றி ஜனவரி 17-ஆம் தேதி காணும் பொங்கலன்று லட்சக்கணக்கான பொதுமக்கள் சென்னை மெரினா கடற்கரையில் கூடுவார்கள் என்று என்பதால், இதனை முன்னிட்டு சென்னையின் முக்கிய மெட்ரோ ரயில் நிலையங்களிலிருந்து மெரினா செல்வதற்கு கேப் வசதியும் உண்டு சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்தும் குறைந்த கட்டணத்தில் சென்னை மெரினாவுக்கு கேப் மூலம் பயணிகள் செல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் மீண்டும் சென்னை மெரினாவில் இருந்து மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு கேப் மூலம் செல்லலாம் என்பதும்  குறிப்பிடத்தக்கது 
 
காணும் பொங்கலை பயன்படுத்தி ஆட்டோ மற்றும் ஷேர்ஆட்டோ அன்றைய தினத்தில் கொள்ளை லாபம் அடிக்க அதிக கட்டணங்களை கேட்கும் நிலையில் சென்னை மெட்ரோவின்  இந்த கேப் வசதியின் சுற்றுலா பயணிகளுக்கு பெறும் வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது