1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 13 நவம்பர் 2019 (08:53 IST)

சென்னை மெட்ரோ ரயிலின் அடுத்த வழித்தடம் எது தெரியுமா?

சென்னையில் மெட்ரோ ரயில் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சரியான கட்டணம், சொகுசான பயணம், டிராபிக் உள்பட எந்த பிரச்சனையும் இல்லாமல் குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல சென்னையில் உதவிகரமாக இருப்பது மெட்ரோ ரயில் மட்டுமே. தற்போது பரங்கிமலை-சென்ட்ரல், வண்ணாரப்பேட்டை- விமானநிலையம் ஆகியவை வழித்தடங்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது.
 
இந்த நிலையில் அடுத்த கட்டமாக மெட்ரோ ரயில் வழிப்பாதையை விரிவுப்படுத்த திட்ட ஆய்வு பணிகள் நடைபெற்று வருவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. குறிப்பாக பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சென்னை விமானநிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் நீட்டிப்பு விரைவில் செயல்படுத்த மெட்ரோ நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. சுமார் 3,500 கோடி ரூபாய் மதிப்பில் திட்டமிட்டுள்ள இந்த திட்டம் வரும் 2021-ஆம் ஆண்டு தொடங்க வாய்ப்பு இருப்பதாகவும், அதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த வழித்தடம் முழுக்க முழுக்க உயர்மட்ட பாதையில் அமைக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது
 
விமான நிலையம் - கிளாம்பாக்கம் வரை 15.3 கி.மீ தூரத்தில் பல்லாவரம், குரோம்பேட்டை, திரு.வி.க நகர், தாம்பரம், இரும்புலியூர், பெருங்களத்தூர், ஆர்.எம்.கே.நகர், வண்டலூர், வண்டலூர் உயிரியல் பூங்கா, கிளாம்பாக்கம் என மொத்தம் 13 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. இந்த வழித்தடம் செயல்பட தொடங்கிவிட்டால் சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கத்துக்கு அதிகபட்சமாக 40 நிமிடங்களில் சென்றுவிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.