1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 8 ஏப்ரல் 2023 (14:35 IST)

இன்றும் நாளையும் அதிக வெப்பநிலை: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் அதிக வெப்ப நிலை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
தமிழ்நாட்டில் கடந்த மாதமே கோடை வெயில் கொளுத்த தொடங்கிய நிலையில் அவ்வப்போது மழை பெய்தாலும் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் வறட்சியான வெப்பநிலை நிலவி வருகிறது. 
 
ஏப்ரல் மாதம் பிறந்ததிலிருந்து அதிக வெப்பநிலை ஏற்பட்டுள்ளது என்பதும் தமிழகத்தின் பல நகரங்களில் 100 டிகிரிக்கு அதிகமான வெப்பநிலை பதிவாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இன்றும் நாளும் தமிழ்நாட்டின் சில இடங்களில் இயல்பை விட அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும் என்றும் இரண்டு முதல் மூன்று டிகிரி வரை வெப்பநிலை இருக்கக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
தமிழ்நாட்டில் 34 முதல் 35 டிகிரி வரை அதிகபட்ச வெப்பநிலை இருக்கும் என்று கூறப்படுவதால் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran