1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 6 ஏப்ரல் 2023 (15:02 IST)

மின் வாகனங்களின் தலைநகராக உருவாகி வருகிறது தமிழ்நாடு: அமைச்சர் தா.மோ. அன்பரசன்

இந்திய அளவில் தமிழ்நாடு மின் வாகனங்களின் தலைநகராக உருவாகி வருகிறது என அமைச்சர் தா.மோ. அன்பரசன் இன்று சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
 
மேலும் இந்தியாவில் தமிழ்நாட்டின் உற்பத்தி பங்கு 24.47% உள்ளது எனவும், இலக்கான 30 சதவிகிதத்தை விரைவில் எட்டுவோம் என்றும் அவர் தெரிவித்தார். பின் தங்கிய 25 மாவட்டங்களில் இருந்து 47% முதலீடுகள் பெறப்பட்டுள்ளதாகவும், இங்கு 37% வேலைவாய்ப்புகள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தா.மோ. அன்பரசன் கூறினார்.
 
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டம் முள்ளிகொளத்தூரில், 28 ஏக்கரில் 1,000 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கக்கூடிய வகையில் ₹14 கோடி திட்ட மதிப்பீட்டில் புதிய தொழிற்பேட்டை ஒன்று தமிழ்நாடு சிட்கோ மூலம் அமைக்கப்படும் என்றும் அமைச்சர் தா.மோ. அன்பரசன் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
 
வேலையில்லா இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தின் கீழ் வியாபாரம் சார்ந்த தொழில்கள் தொடங்கிட, தற்போதைய திட்ட மதிப்பின் உச்சவரம்பு ₹5 லட்சத்திலிருந்து ₹15 லட்சமாக உயர்த்தப்படும். இதற்கான மானியமும் ₹1.25 லட்சத்திலிருந்து ₹3.75 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் அமைச்சர் தா.மோ. அன்பரசன் கூறினார்,
 
Edited by Siva