புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 28 அக்டோபர் 2021 (08:17 IST)

உருவாகியது காற்றழுத்த தாழ்வு: 3 நாட்களுக்கு கனமழை

தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
தென்மேற்கு வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக நாளை முதல் மூன்று நாட்களுக்கு தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும் குறிப்பாக நெல்லை கன்னியாகுமரி தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலும் தென் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்கள் உள் மாவட்டங்களிலும் கன மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
மேலும் சென்னையை பொருத்தவரை விட்டு விட்டு ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது/ மேலும் தென்மேற்கு வங்க கடல் பகுதியில் 40 முதல் 60 கிலோ மீட்டர் வரை சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.