ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 12 செப்டம்பர் 2024 (15:59 IST)

சமோசாவில் தவளையின் கால்.! மிரண்டு போன வாடிக்கையாளர்..!!

Samosa
உத்தரப் பிரதேச மாநிலத்தில் பேக்கரியில் வாங்கிய சமோசாவில் தவளையின் கால் இருந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்தார்.
 
நாட்டில் உள்ள பெரும்பாலான மக்கள் தற்போது ஹோட்டல் உணவுகளையே விரும்பி சாப்பிடுகின்றனர்.  அவ்வாறு செல்லும் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் பல சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. குறிப்பாக உணவில் கரப்பான் பூச்சி, புழு, பிளேடு துண்டுகள் இருந்த சம்பவங்கள்  வாடிக்கையாளர்களை அதிர்ச்சியடைய செய்தது. 
 
சமீபத்தில் லேஸ் பாக்கெட்டுகளில் கரப்பான் பூச்சி கண்டறியப்பட்டது. வேஃபர்ஸ் பாக்கெட்டில் ஒரு பொரித்த தவளை கண்டறியப்பட்டது. மேலும் ஒரு குடும்பத்தினர் வாங்கிய ஹேர்ஷேஸ் சாக்லேட் சிரப் பாட்டிலில் இறந்த எலியைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 
 
அதுமட்டுமின்றி மலாட்டைச் சேர்ந்த 26 வயது மருத்துவர், ஆன்லைனில் ஆர்டர் செய்த ஐஸ்கிரீமில் மனித கட்டைவிரலைக் கண்டுபிடித்தார்.  அந்த வகையில் தற்போது உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள காசியாபாத் பிகானேர் இனிப்பு கடையில் சமோசாவில் தவளையின் கால் இருந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்தார். 

 
இதுகுறித்து வாடிக்கையாளர் அமன் புகார் அளித்ததையடுத்து, காவல் துறையினர் நிகழ்விடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தினர். சுகாதாரத்துறை அதிகாரிகளும் உணவு மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.  இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதை  மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.