1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Today gold and silver rate at chennai

மாற்றமே இல்லாத தங்கம் விலை.. தொடர் வீழ்ச்சியில் வெள்ளி.. இன்றைய சென்னை நிலவரம்..!

Gold
தங்கம் விலை கடந்த இரண்டு நாட்களாக மாற்றமே இல்லாத நிலையில் இன்று மூன்றாவது நாளாகவும் தங்கம் விலையில் மாற்றம் இல்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் வெள்ளி விலை ஒரு கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

தங்கம் விலை ஒவ்வொரு நாளும் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் சென்னையில் தங்கம் விலையில் இன்று மாற்றம் இல்லை என்று கூறப்பட்டுள்ள நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.

சென்னையில் ஆபரணத் தங்கம் இன்று விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூபாய்   6,670 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை   ரூபாய் 53,360 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.54,000ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.

சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,125 எனவும் ஒரு சவரன் ரூபாய் 57,000 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 90.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய்  90,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது

Edited by Siva
 
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
திடீரென சுமார் 500 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்த சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!