1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Chennai meteorological center says about rain

அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்!

மழை
அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இன்று காலை முதல் சென்னையின் பல இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது. 
 
இந்த நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில்  சென்னை உள்பட 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தஞ்சை, அரியலூர், திண்டுக்கல், கரூர், சேலம் மற்றும் நாமக்கல்ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் மேற்கண்ட 10 மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
 
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
நிலவில் இறங்கும் சந்திரயான்-3! கடைசி “திக் திக்” மணித்துளிகள்! – நேரடி ஒளிபரப்பு!