இன்று முதல் 4 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோடை காலம் முடிவடைந்ததை அடுத்து அடுத்ததாக தென்மேற்கு பருவமழை விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தமிழகம் கேரளா புதுவை ஆகிய மாநிலங்களில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு இடை மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
மேலும் இன்று தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி, நாமக்கல், திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Edited by Mahendran