செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 22 மே 2023 (13:47 IST)

கர்நாடக சட்டமன்றத்தை பசு கோமியத்தால் பரிகாரம் செய்த காங்கிரஸார்.. என்ன காரணம்..?

கர்நாடக சட்டமன்ற வளாகத்தை காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் பசு கோமியத்தால் பரிகாரம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
சமீபத்தில் கர்நாடக மாநில தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் ஆளுங்கட்சியாக இருந்த பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்தது. மேலும் சித்தராமையா தலைமையிலான அமைச்சரவை சமீபத்தில் பதவி ஏற்றுக்கொண்டது 
 
இந்த நிலையில் விரைவில் கர்நாடக சட்டமன்றம் கூட இருக்கும் நிலையில் சட்டமன்ற வளாகத்தை காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் மற்றும் பிரமுகர்கள் பசு கோமியத்தை வைத்து பூஜை செய்து பரிகாரம் செய்தனர். 
 
பாஜகவின் ஊழலால் கர்நாடக சட்டப்பேரவையின் புனிதத்தன்மை கெட்டுவிட்டதாகவும் அதனால் பசு கோமியம் கொண்டு பூஜை செய்வதாகவும் காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்த வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
 
Edited by Mahendran