1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Chennai meteorological center says about rain

தமிழ்நாட்டில் இன்று இடி மின்னலுடன் கூடிய மழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

rain
தமிழகத்தின் சில பகுதிகளில் இன்று இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சற்றுமுன் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
மேற்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக  மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் தமிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் நாளை மறுதினம் வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வரை காற்று வீசும் வாய்ப்பிருப்பதால் மீனவர்கள் இந்த பகுதியில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது கற்றுக்கொண்டேன்
 
 
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
காலநிலை செயல்திட்டத்தை ஆங்கிலத்தில் அறிவிப்பதா? சென்னை மாநகராட்சிக்கு அன்புமணி கண்டனம்!