1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 3 ஜனவரி 2023 (08:10 IST)

5 வாகனங்கள் அடுத்தடுத்து மோதியதால் 5 பேர் உயிரிழப்பு: திருச்சி-சென்னை சாலையில் பயங்கர விபத்து

Accident
திருச்சி சென்னை சாலையில் அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதிய விபத்து காரணமாக 5 பேர் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
 
திருச்சி சென்னை சாலை எப்போதும் பிஸியாக இருக்கும் என்பதும் குறிப்பாக தென் மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் அந்த பகுதியில் மிக வேகமாக செல்லும் என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் நேற்று இரவு திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 5 வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதியதில் இரண்டு பெண்கள் 2 குழந்தைகள் உள்பட 5 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
ஒரு தனியார் பேருந்து இரண்டு லாரிகள் மற்றும் இரண்டு கார்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்ததாகவும் ஒரு சிலர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
இந்த நிலையில் வேப்பூர் அருகே இந்த விபத்து நடந்ததாகவும் இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் யார் அவர்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளனன.
 
Edited by Siva