திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 10 ஏப்ரல் 2023 (18:43 IST)

சென்னை - மதுரை தேஜஸ் விரைவு ரயிலில் திடீர் மாற்றம்..!

tejas
தென் மாவட்ட மக்களுக்கு சென்னை மதுரை தேஜஸ் ரயில் வரப் பிரசாதமாக இருந்து வருகிறது என்பதும் இந்த ரயில் மிக விரைவாக சென்னையிலிருந்து மதுரை செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இதனை அடுத்து இந்த ரயிலில் அதிக பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் திருச்சி பகுதியில் கட்டுமான பணிகள் நடைபெறுவதன் காரணமாக ஏப்ரல் 11 மற்றும் 12 ஆகிய இரண்டு நாட்கள் மட்டும் தேஜஸ் ரயிலில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. 
 
ஏப்ரல் 11, 12ஆம் தேதி சென்னை மதுரை தேஜாஸ் ரயில் திருச்சி வரை மட்டுமே செல்லும் என்றும் அதேபோல் மறு மார்க்கமாக அந்த ரயில் திருச்சியில் இருந்து சென்னைக்கு புறப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இருப்பினும் ஏப்ரல் 13-ஆம் தேதியிலிருந்து வழக்கம் போல் சென்னை மதுரை தேஜஸ் ரயில் செயல்படும் என்றும் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
 
Edited by Siva