திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 9 ஏப்ரல் 2023 (16:13 IST)

தமிழகத்தின் நீண்ட மேம்பாலம்: மதுரை - நத்தம் பாலம் எத்தனை கிமீ தெரியுமா?

தமிழ்நாட்டின் மிக நீளமான மதுரை நத்தம் பாலத்தை நேற்று பிரதமர் காணொளி மூலம் திறந்து வைத்த நிலையில் இந்த பாலம் மொத்தம் 7.3  கிலோமீட்டர் என தகவல் வெளியாகி உள்ளன. 
 
நேற்று மாலை பிரதமர் மோடி இந்த பாலத்தை  திறந்து வைத்தவுடன் இந்த பாலத்தின் வழியாக பொதுமக்கள் வாகனங்களில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். மதுரை நத்தம் இடையே நான்கு வழி சாலையாக அமைக்கப்பட்டிருக்கும் இந்த பாலத்தில் இருந்து ஊமச்சிகுளத்தை அடையலாம்.  இதன் மொத்த கிலோமீட்டர் 7.3 ஆகும். 
 
பிரதமர் இந்த பாலத்தை திறந்து வைத்த உடன் பொதுமக்கள் இந்த பாலத்தின் வழியே  வாகனங்களில் சென்றனர் இந்த பாலத்தின் வழியாக பயணம் செய்வது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் போக்குவரத்து பிரச்சனை இல்லாமல் மிகவும் எளிதாக சென்றடைய முடிகிறது என்றும் வாகன ஓட்டிகள் கருத்து தெரிவித்தனர். 
 
சொக்கி களத்தில் இருந்து பத்து நிமிடங்களுக்குள் தல்லாகுளம் மற்றும் மாநகராட்சியின் பிரதான வாயிலை அடையும் அளவுக்கு இந்த பாலம் உருவாக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த பாலம் 613 கோடி ரூபாய் செலவில் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva