வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 6 மார்ச் 2023 (17:44 IST)

சென்னை ஐஐடியில் 4 ஆண்டுகால புதிய பட்டப்படிப்பு: அறிமுகம் செய்து வைத்தார் மத்திய கல்வி அமைச்சர்!

Chennai IIT
சென்னை ஐஐடியில் நான்காண்டு கால புதிய பட்டப் படிப்பை மத்திய கல்வி அமைச்சர் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
 
சென்னை ஐஐடி சார்பில் மின்னணு அமைப்புகள் துறையில் நான்காண்டு கால இளநிலை அறிவியல் புதிய பட்டப் படிப்பை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதான் அவர்கள் காணொளி மூலம் இன்று அறிமுகம் செய்து வைத்தார். 
 
பனிரெண்டாம் வகுப்பில் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களை பயின்று தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அனைவரும் இந்த படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் இந்த படிப்புக்கு வயது வேறுபாடு இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடைபெறும் என்றும் ஆய்வகங்களை பயன்படுத்துவதற்காக ஒரு ஆண்டில் இரண்டு வாரங்கள் மட்டும் மாணவர்கள் ஐஐடி வளாகத்திற்கு வரவழைக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அடிப்படை பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு அதன் பிறகு தகுதி தேர்வு மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva