1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: ஞாயிறு, 5 மார்ச் 2023 (15:01 IST)

பத்து தல படம் முழுவதும் ரீமேக் இல்லை… இயக்குனர் கிருஷ்ணா கொடுத்த அப்டேட்!

கன்னடத்தில் ஹிட்டடித்த மப்டி படத்தை தமிழில் முதலில் அதே பெயரில் ரீமேக் செய்ய முடிவெடுத்தார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா. இந்த படத்தின் நாயகனாக கௌதம் கார்த்திக்கும், முக்கியமான ஒரு வேடத்தில் சிம்பு நடிக்கவும் ஒப்பந்தமாகி சில நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. ஆனால் அதன் பிறகு சிம்பு படப்பிடிப்பில் கலந்து கொள்ளாததால் நிறுத்தப்பட்டது. இப்போது சில பல மாற்றங்களோடு ‘பத்து தல’ என்ற பெயரோடு அந்த படம் மீண்டும் தொடங்கப்பட்டு படப்பிடிப்பு முழுவதும் நிறைவு பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மார்ச் மாதம் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆடியோ வெளியீடு வரும் மார்ச் 18 ஆம் தேதி நடக்க உள்ளது.

இந்நிலையில் படம் பற்றி பேசியுள்ள இயக்குனர் கிருஷ்ணா “கன்னட படமான மஃப்டி படத்தை அப்படியே ரீமேக் செய்து பத்து தல படத்தை உருவாக்கவில்லை. நிறைய மாற்றங்களை செய்துள்ளோம். சில காட்சிகள் மட்டுமே ஒரே மாதிரி இருக்கும். இது ஒரு தழுவல் படமாகதான் இருக்கும்” எனக் கூறியுள்ளார்.