1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 22 டிசம்பர் 2022 (17:11 IST)

டாஸ்மாக்கில் கத்தியைக் காட்டி மிரட்டி மதுபானம் வாங்கிய இளைஞர்!

Trichy
திருச்சி டாஸ்மாக்கில் கத்தியைக் காட்டி ஒரு இளைஞர் மதுபானங்களை  பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் நிறுவனத்தை அரசே நடத்தி வரும் நிலையில், திருச்சி மாவட்டத்தில் இன்று காலையில் ஒரு டாஸ்மாக் கடையில் ஊழியர்கள் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது, ஒரு  இளைஞர் வந்து ஊழியர்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, மதுபானங்களுக்கு காசுகொடுக்காமல் நாளை கொடுப்பதாக அவர் அதை எடுத்துச் சென்றார்.

இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Edited By Sinoj