திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 10 பிப்ரவரி 2023 (21:06 IST)

ஆசிரியர்களை இடமாற்றம் செய்யும் ஆணை; சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

chennai highcourt
ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யும் அரசாணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. 
 
அரசு உதவி பெறும் பள்ளிகளில் கூடுதல் ஆசிரியர்களை இடம் மாற்றம் செய்ய சமீபத்தில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் கூடுதல் ஆசிரியர்களை பிற பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்து பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. 
 
காஞ்சிபுரத்தை சேர்ந்த ஆசிரியர்கள் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கூடுதல் ஆசிரியர்களை இடம் மாற்றம் செய்யும் அரசாணைக்கு இடைக்கால தடை விதிப்பதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Mahendran