1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 9 பிப்ரவரி 2023 (08:54 IST)

நெகட்டிவ் வைப்ப தூக்கி போடுங்க… ஸ்மைலிங் முகத்தோடு ராஷ்மிகா வெளியிட்ட புகைப்படம்!

இப்போது இந்திய அளவில் பிரபலமான நடிகையாக ராஷ்மிகா இருந்தாலும், அவரின் சினிமா வாழ்க்கை தொடங்கியது கன்னட சினிமாவில்தான். அடுத்தடுத்து பன்மொழிப் படங்களில் நடித்து ஹிட் கொடுத்து முன்னணி நடிகையாக மாறியுள்ள அவரை ரசிகர்கள் செல்லமாக நேஷனல் க்ரஷ் என அழைத்து வருகின்றனர்.

இதற்கிடையில் ராஷ்மிகா, பிரபல தெலுங்கு நடிகரான விஜய் தேவரகொண்டாவை காதலிப்பதாக கிசுகிசுக்கள் எழுந்தன. ஆனால் அதை இருவருமே மறுத்து வருகின்றனர். இந்நிலையில் இருவரும் ஒன்றாக மாலத்தீவுகளுக்கு சுற்றுலா சென்றதாக தகவல்கள் பரவின.

இந்நிலையில் படங்களில் பிஸியாக நடித்து வரும் ராஷ்மிகா, சினிமாவுக்கு வெளியேயும் தனனுடைய கவர்ச்சி படங்களை வெளியிட்டு வைரல் ஆகிவருகிறார். இந்நிலையில் இப்போது அவர் வெள்ளை உடையில் வெளியிட்டுள்ள புகைப்படம் கவனத்தைப் பெற்றுள்ளது.