வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 9 பிப்ரவரி 2023 (19:42 IST)

ஒலிம்பிக்கில் ரஷ்யாவுக்கு தடைவிதிக்க வேண்டும்- டென்னிஸ் வீராங்கனை எலினா

Ukraine
உக்ரைன்  நாட்டின் மீது ரஷியா போர் தொடுத்து 1 ஆண்டை நெருங்கியுள்ளது. உக்ரைன் நாட்டிற்கு மேற்கத்திய நாடுகளும், அமெரிக்கவும்  ஆயுத உதவியும், நிதி உதவியும் செய்து வருகின்றன.

இதனால், தற்போது வரை உக்ரைன் நாடு வல்லரசு நடான ரஷ்யாவை துணிவுடன் எதிர்கொண்டு வருகிறது.

இதனால் இரு தரப்பிலும் நூற்றுக்கணக்கான மக்களும், ராணுவத்தினரும் உயிரிழந்துள்ளன.

இப்போர் முடிவுக்கு வர வேண்டுமென்பதுதான் உலக நாடுகளின் கோரிக்கையாக உள்ளது.

இந்த நிலையில்,  கடந்த ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற உக்ரைன் நாட்டு வீராங்கனை எலினா ஸ்விடோலினா,  2024 ஆம் ஆண்டு பாரிஸில் நடக்கும்  ஒலிம்பிக் போட்டியில் இருந்து ரஷ்யா மற்றும் பெலரஷ்யா வீரர்களுக்குத் தடை விதிக்க வேண்டுமென கூறியுள்ளார்.

ஒருவேளை ரஷ்யா நாடு வீரர்களை ஒலிம்பிக் போட்டிற்கு அனுமதித்தால் நாங்கள் போட்டியைப் புறக்கணிப்போம் என்று தெரிவித்துள்ளார்.