நீர் ஆதாரங்களை பாதுகாக்க தனித்துறை அமைக்கலாமே? – உயர்நீதிமன்றம் கேள்வி!
தமிழகத்தில் பல்வேறு செயல்பாடுகளுக்கும் துறைகள் அமைக்கப்பட்டுள்ளது போல நீர் ஆதாரங்களை பாதுகாக்க தனித்துறை அமைக்கலாமே என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
ஓடை ஒன்று ஆக்கிரமிக்கப்பட்டது குறித்து பெண் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கின் மீதான விசாரணையின் போது கருத்து கூறிய நீதிபதிகள் “இயற்கையை அழித்து மேற்கொள்ளும் செயல்பாடுகளை எப்படி வளர்ச்சியாக ஏற்றுக்கொள்ள முடியும்?” என கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதே சமயம் தமிழகத்தில் பல்வேறு செயல்பாடுகளுக்கான பாதுகாப்பினை உறுதி செய்ய பல்வேறு துறைகள் அமைக்கப்பட்டுள்ளது போல நீர் ஆதாரங்களை பாதுகாக்க ஏன் தனித்துறை அமைக்க கூடாது? என கேள்வியெழுப்பிள்ள நீதிமன்றம் இதுகுறித்து 4 வாரங்களில் பொதுப்பணித்துறை மற்றும் சென்னை மாநகராட்சி பதிலளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.