ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : வெள்ளி, 31 ஜூலை 2020 (13:28 IST)

சீமான் மீது முதல்வர் தரப்பில் வழக்கு! – ரத்து செய்தது நீதிமன்றம்

தமிழக அரசு குறித்து அவதூறு பேசியதாக சீமான் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டில் ஜூலை மாதத்தில் நாம் தமிழர் கட்சி கூட்டம் ஒன்றில் பேசிய கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழக அரசின் மீதும், முதல்வர் மீது சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கடந்த ஓராண்டு காலமாக நடந்து வந்த இந்த வழக்கில் இன்றைய விசாரணையில் சீமான் மீது முதல்வர் தரப்பில் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. தவறான புரிதலால் சீமான் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது காங்கிரஸ் சார்பிலும் வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.