1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 15 மார்ச் 2023 (13:25 IST)

தேர்வு எழுதணும்; ஒலிப்பெருக்கிகள் வேண்டாம்! – கோவில்களுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தல்!

தமிழ்நாட்டில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் தொடங்கியுள்ள நிலையில் கோவில்களில் ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்த வேண்டாம் என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தில் பயிலும் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. 12ம் வகுப்புக்கு நேற்று முன் தினமும், 11ம் வகுப்புக்கு நேற்றும் பொதுத்தேர்வுகள் தொடங்கிய நிலையில் தினசரி பல்வேறு பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. அதேசமயம் பங்குனி மாத பிறப்பையொட்டி பல கோவில்களில் திருவிழா தொடங்கியுள்ளதால் ஒலிப்பெருக்கிகளில் சத்தமாக பாடல்கள் வைப்பது மாணவர்கள் தேர்வு எழுதுவது, படிப்பதற்கு இடையூறாக உள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது.

சேலம் ஜாரிகொண்டாலம்பட்டியில் திருவிழாவிற்காக ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்துவது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதில் “10,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடந்து வருவதை கருத்தில் கொண்டு தேர்வு முடியும் வரை கோயில்களில் ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்” என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Edit by Prasanth.K