திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 1 ஏப்ரல் 2021 (12:58 IST)

ஆதாரில் உள்ள மொபைல் எண் புதுச்சேரி பாஜக கையில்..? – ஆதார் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவு!

ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்களுக்கு புதுச்சேரி பாஜக எம்.எம்.எஸ் அனுப்பியது தொடர்பாக ஆதார ஆணையம் விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரி சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ள நிலையில் புதுச்சேரி வாக்காளர்களுக்கு மட்டும் பாஜக சார்பில் வாக்கு கேட்டு எஸ்.எம்.எஸ் அனுப்பப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் புதுச்சேரி வாக்காளர்கள் எண்கள் பாஜகவுக்கு கிடைத்தது எப்படி என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில் எஸ்.எம்.எஸ் அனுப்பப்பட்ட அனைத்து எண்களும் ஆதாருடன் இணைக்கப்பட்ட எண்கள் என தெரிய வந்துள்ளது. இதுகுறித்த விசாரணையில் ஆதாருடன் இணைக்கப்பட்ட எண்களுக்கு மட்டும் எஸ்.எம்.எஸ் வந்துள்ளதால் இதுகுறித்த விசாரணை மேற்கொள்ள ஆதார் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.