புதுச்சேரியில் தேர்தலை ஏன் தள்ளி வைக்கக் கூடாது? – உயர்நீதிமன்றம் கேள்வி!

high court
Prasanth Karthick| Last Modified வெள்ளி, 26 மார்ச் 2021 (15:06 IST)
புதுச்சேரியில் மொபைல் எஸ்.எம்.எஸ் மூலமாக பாஜக தேர்தல் குறுஞ்செய்தி அனுப்பிய வழக்கில் தேர்தலை ஒத்திவைப்பது குறித்து உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் பாஜக, என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக கூட்டணி தேர்தலை சந்திக்கும் நிலையில் புதுச்சேரியில் உள்ள மொபைல் எண்களுக்கு பாஜக எஸ்.எம்.எஸ் மூலம் தேர்தல் குறுஞ்செய்தி அனுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தங்களது தனிப்பட்ட ஆதார் விவரங்கள், மொபைல் எண் அரசியல் கட்சிக்கு சென்றது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் புகார் அளித்த நிலையில் அதுகுறித்த விசாரணை இன்று நடைபெற்றது. அதில் “புதுச்சேரி மக்களின் தொலைபேசி எண்கள் பாஜகவிற்கு கிடைத்தது எப்படி?” என கேள்வி எழுப்பியுள்ள நீதிமன்றம் இந்த வழக்கினால் “ஏன் புதுச்சேரி சட்டமன்ற தேர்தலை தள்ளி வைக்கக்கூடாது?” என்றும் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையம் உரிய விசாரணை நடைபெற்று வருவதாக கூறியுள்ள நிலையில், பாஜகவிற்கு எதிரான புகாரை உடனடியாக விசாரிக்க ஆதார் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ள நிலையில் இந்த வழக்கை மார்ச் 31க்கு ஒத்தி வைத்துள்ளது.இதில் மேலும் படிக்கவும் :