வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 1 மார்ச் 2021 (14:57 IST)

அமைச்சர் மதுரவாயல் நெருஞ்சாலையில் போயிருக்காரா? – நீதிபதிகள் கேள்வி!

மதுரவாயல் நெடுஞ்சாலையில் 50 சதவீத கட்டணம் குறைப்பை திரும்ப பெற முடியாது என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மதுரவாயல் – வாலஜா நெடுஞ்சாலையில் சமீபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் சாலை முறையாக பராமரிக்கப்படவில்லை என்ற புகார் எழுந்தது. இந்த வழக்கை தானாக முன் வந்து விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மதுரவாயல் – வாலஜா நெடுஞ்சாலையில் உள்ள இரண்டு சுங்கசாவடிகளிலும் கட்டணம் 50 சதவீதம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

நீதிமன்றத்தின் உத்தரவின் மீது நெடுஞ்சாலை ஆணையம் மேல் முறையீடு செய்திருந்த நிலையில் இன்று நடைபெற்ற விசாரணையில் 50 சதவீத கட்டணத்தை ரத்து செய்ய முடியாது என்று கூறியுள்ள நீதிமன்றம் மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஒரு முறையாவது மதுரவாயல் நெடுஞ்சாலையில் பயணித்தது உண்டா என கேள்வியும் எழுப்பியுள்ளது.