ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 5 ஏப்ரல் 2021 (11:29 IST)

ஒழுங்கா விளக்கம் தராவிட்டால் ஊரடங்கு ரத்து! – புதுச்சேரிக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்!

புதுச்சேரியில் தேர்தல் சமயத்தில் 114 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதற்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

தமிழகம், புதுச்சேரியில் நாளை ஒரே நாளில் வாக்குபதிவு நடத்தப்பட உள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் புதுச்சேரியில் 144 தடை உத்தரவை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவை திரும்ப பெற வேண்டும் என புதுச்சேரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கு மீதான விசாரணையில் புதுச்சேரியில் தேர்தலை முன்னிட்டு 144 தடை உத்தரவு வழங்க ஆட்சியருக்கு அதிகாரம் உள்ளது என்றும், முந்தைய தேர்தல்களிலும் இதுபோன்று ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதாகவும் விளக்கம் அளித்துள்ளது.

இந்த விளக்கம் குறித்து கேள்வி எழுப்பிய நீதிபதிகள் அதிகாரம் இருக்கிறது என்பதற்காக எல்லா வழக்குகளிலும் மரண தண்டனை கொடுத்து விடுகிறோமா? சுதந்திர காற்றை சுவாசிக்கும் நாட்டில் நாம் வாழ்கிறோம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். 144 தடை உத்தரவு குறித்த சரியான விளக்கம் அளிக்காவிட்டால் தடை உத்தரவு ரத்து செய்யப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.