1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Chennai get record in vaccine 2nd dose

2 தவணை தடுப்பூசி - சென்னை முதலிடம்!

கொரோனா
கொரோனா வைரஸ் பாதிப்பில் தமிழகம் கடந்த சில நாட்களாக முதல் இடத்தில் இருந்து வரும் நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி போடுவதிலும் தமிழகத்தின் தலைநகரான சென்னை சாதனை செய்துள்ளது 
 
இந்த நிலையில் இரண்டாவது தவணை தடுப்பூசி போடுவதால் சென்னைக்கு முதலிடம் பிடித்துள்ளதாக சற்றுமுன் தகவல் வெளிவந்துள்ளது, இந்தியாவிலேயே சென்னை நகரில் தான் 13 சதவீத மக்களுக்கு கொரோனா இரண்டாவது தவணை செலுத்தி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது இதனை அடுத்து சென்னை இரண்டாவது தவணை தடுப்பூசி போடுவதில் சாதனை புரிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
சென்னையை அடுத்து கொல்கத்தா, குர்கிராம் ஆகிய நகரங்களில் உள்ள பொதுமக்கள் 12% தடுப்பூசிகள் இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் தடுப்பூசிகள் மிகவேகமாக தமிழகத்தில் போட்டுக் கொண்டு வருவதால் விரைவில் தமிழகம் கொரோனாவில் இருந்து விடுபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 
About Writer
mahendran
அடுத்த கட்டுரையில்
11 ஆயிரத்திற்கு கீழ் குறைந்த கொரொனா பாதிப்பு