வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 17 மே 2023 (15:50 IST)

சென்னையில் மின் தடையை தவிர்க்க நடவடிக்கை: அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

Senthil Balaji
கோடை காலம் என்றாலே மின் வெட்டும் சேர்ந்து வரும் என்பதை அடுத்து சென்னை உள்பட பல பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டு வருவதாக சமூக வலைதளங்களில் பொதுமக்கள் பதிவு செய்து வருகின்றனர். 
 
குறிப்பாக சென்னையின் பல இடங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இது குறித்து பேட்டி அளித்த மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் சென்னையில் மின் நுகர்வு அதிகம் உள்ள இடங்கள் கணக்கெடுக்கப்பட்டு மின்விநியோகத்தை சீராக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 
 
மேலும் கடந்த இரண்டு நாட்களில் 4016 மெகாவாட் ஆக மின் நுகர்வு அதிகரித்துள்ளது என்றும், 45 நாட்களில் 19,387 மெகாவாட் ஆக அதிகரித்துள்ளது என்றும், மின் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டால் உடனுக்குடன் சரி செய்யப்படுகிறது என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி அளித்துள்ளார்.
 
Edited by Mahendran