வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 6 டிசம்பர் 2020 (07:44 IST)

சென்னையில் மீண்டும் விடியவிடிய மழை: 24 மணி நேரம் தொடரும் என தகவல்!

வங்க கடலில் உருவான புரெவி புயல் இலங்கையை கடந்து ராமேஸ்வரம் நோக்கி வந்து கொண்டிருந்தாலும் ஒரே இடத்தில் பல மணி நேரங்களாக நிலை கொண்டிருப்பதால் சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது 
 
நேற்று இரவு முதல் விடிய விடிய சென்னையில் கனமழை பெய்தது என்பதும் இதனால் சென்னையின் பெரும்பாலான சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
அதுமட்டுமின்றி சென்னை மற்றும் புறநகரில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடல் காற்றின் வேகம் குறைந்தாலும் மணிக்கு 30 கிலோ மீட்டர் முதல் 40 கிலோ மீட்டர் வரை காற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
சென்னையில் நேற்று இரவு முதல் ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, அசோக்நகர், வடபழனி, புரசைவாக்கம், கேகே நகர், வளசரவாக்கம், கிண்டி, சைதாப்பேட்டை, அசோக் நகர் உள்ளிட்ட பல இடங்களில் விடிய விடிய மழை மழை பெய்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேலும் இராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, மாவட்டங்களிலும் மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது